தமிழக அரசுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உள்ளிட்டவைகள் மூலமாக பெறப்படும் வருவாய் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது இந்த வரி மூலமாக சாலைகளை சீரமைத்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துதல் என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 2022-2023 ஆம் நிதியாண்டு முடிவடைந்துள்ள நிலையில் ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் வீடுகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.

அதன்படி மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் பலரும் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதால் வருகின்ற மார்ச் 15ஆம் தேதிக்குள் வரி செலுத்தாத பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்த வேண்டும் எனவும் இல்லை என்றால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும், ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது