ஒவ்வொரு வருடமும் பொங்கலையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற தொடங்கிவிடும். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியில் இந்த வருடத்திற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

கடந்த வருடம் திருச்சிக்கு வந்த இலங்கை கவர்னர் செந்தில் தொண்டமான் இலங்கையிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் இன்று இலங்கை திரிகோணமலை ஆம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் 300க்கும் அதிகமான காளைகள் பங்கேற்கும் நிலையில் 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 50 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.