
ஈரோட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது திமுக அரசு மீது குறை சொல்ல எதுவும் இல்லாததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்கிறார். வயிற்று எரிச்சல் காரணமாக புலம்பி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடி போல சட்டமன்றத்தில் சொன்னதையே திரும்பத் திரும்ப பேசுகிறார். நீங்கள் உருண்டு புரண்டு சொன்னாலும் அதில் உண்மை இல்லை என கூறியுள்ளார்.