இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் துரித உணவுகளுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் உடலில் பல நோய்களும் ஏற்படுகிறது. குறிப்பாக மக்களுக்கு வயிற்றுப்புண் என்பதை பெரிய பிரச்சனையாகவே உள்ளது. இதற்கு சரியான ஒரு தீர்வாக பூசணிக்காய் சூப் விளங்குகிறது. இதனை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்
  • வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • பால் – ஒரு டம்ளர்
  • மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • சீரகத்தூள்  – ஒரு டீஸ்பூன்
  • பூண்டு – 2 பல்
  • சின்ன வெங்காயம் – 4
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு பூசணிக்காய் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பிறகு நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பிறகு பூசணிக்காயை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு அரைத்த கலவையை வடிகட்டி தண்ணீரில் கலக்க வேண்டும். அதன் பிறகு பால், மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வைத்ததும் இறக்கி பரிமாறலாம். இந்த சூப்பை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் வயிற்றுப் புண் சரியாகிவிடும்.