
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசத்தில் உள்ள ரேபேலி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் களம் இறங்கினார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது எந்த தொகுதியை அவர் விட்டுக் கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது இரு தொகுதிகளில் அவர் வெற்றி பெற்ற நிலையில் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் பதவியை கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இது தொடர்பாக பதிலளித்த ராகுல் காந்தி இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் ராகுல் காந்தி வயநாடு தொகுதி பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தென்னிந்தியாவில் நிலவுகிறது. கடந்த தேர்தலிலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதால் கண்டிப்பாக இந்த முறை அந்த தொகுதியை அவர் தக்க வைக்க வேண்டும் என அத்தொகுதி மக்கள் விரும்புகிறார்கள். மேலும் வயநாடு தொகுதியில் அவர் நிலைத்திருந்தால் கண்டிப்பாக தென்னிந்தியாவில் காங்கிரசால் நிலைக்க முடியும் என கட்சியினர் நம்புகிறார்கள்.