அமைப்புசாரா துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழைகளுக்காக உதவும் நோக்கத்தில் மத்திய அரசின் திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். தங்களது வயதுக்கு ஏற்ப மாதாந்திர கட்டணத்தை செலுத்தக்கூடிய திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். அதற்கு ஏற்றது போல மாதம் ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். இதில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தனிநபர் 25 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்து மாதம் 5 ஆயிரம் ரூபாய் பங்களிக்க தொடங்கினால் ஓய்வு பெறும் வரை மொத்த பங்களிப்பு 21 லட்சம் ஆக இருக்கும் எனவும் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் ஐ சி ஓய்வூதிய திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு உங்கள் தொகையை மொத்தமாக முதலீடு செய்யலாம். அதன் பிறகு உங்களின் உத்திரவாதமான ஓய்வூதியத்தை நீங்கள் பெற முடியும்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் 60 வயது முதல் 79 வயது வரையிலான பிபிஎல் பிரிவை சேர்ந்த முதியோருக்கு மாதம் 300 ரூபாய் வழங்கப்படும். 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் 500 ரூபாய் ஒய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.