இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசம், ராணி கம்லாபதி – ஜபல்பூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை கண்டு பயணி அதிர்ச்சி அடைந்தார். சுபேந்து கேஷரி என்ற பயணி வந்தே பாரத் ரயிலில் பயணித்தபோது அசைவ உணவு வாங்கியுள்ளார். உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை அடுத்து புகைப்படம் எடுத்து X தளத்தில் பதிவிட்டு பயணி புகார் தெரிவித்துள்ளார்.