வண்ணத்துப் பூச்சிகள் என்ற இனம் இரவுப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி என்ற இனத்தில் இருந்து தான் உருவானது. இவை சுமார் 15 கோடி வருடங்களுக்கு முன்னால் பூக்கும் தாவரங்கள் உருவான போது உருவானவை. அப்போதுதான் இப்போதுள்ள கண்டங்களும் உருவெடுத்தன. அது கிரடேசியஸ் காலம் எனப்படும் சாக்பீஸ் காலம். உலகில் இதுவரை இருப்பதாகக் கூறப்படும் வண்ணத்துப் பூச்சிகளின் இனங்கள் 4 கோடியே 50 லட்சம் வகைகள். அண்டார்டிகா தவிர அனைத்து வெப்ப பகுதிகளிலும் இவை பரவலாக காணப்படுகின்றன.

முதிர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் ஒரு வாரத்திலிருந்து, ஒரு வருடம் வரை கூட, அவற்றின் இனத்துக்கு தகுந்தாற்போல் வாழ்கின்றன. வண்ணத்துப் பூச்சியின் கம்பளிப் புழு வாழ்நாள் நீண்டதாக இருக்கும்.
இல்லையெனில், கூட்டுப் புழு பருவம் அல்லது முட்டை பருவம் நீண்டதாகவும்/செயலற்றதாகவும், குளிரிலிருந்து தப்பித்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும் பொழுது அதனுடைய சுவையை கால்கள் மூலமாகவே அறிகின்றன.