
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மக்னா என்ற காட்டு யானை திடீரென முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த மக்னா யானையை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பொது மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது