இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கு 8.30 ஆக இருந்த MCLR, 10 புள்ளிகள் உயர்ந்த 8 புள்ளி 40 ஆக உள்ளது. இதன் மூலமாக வீட்டுக் கடனுக்கான வட்டி தொகை கணிசமாக உயரும். அதோடு ஃப்ளோட்டிங் வட்டியை கொண்டு அனைத்து விதமான கடனில் வட்டியும் உயரக்கூடும். இதன் காரணமாக sbi வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.