பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் அல்லது பிராண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் அல்லது பொருள் ரீதியாக பெறும் பயன் விவரங்களை கட்டாயமாக வெளியிட வேண்டும். மேலும் விளம்பரங்களில் sponsored, Advertisement, paid promotions  ஆகிய விளம்பரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் பிரபலங்கள், INFLUENCERS- க்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் சமூக வலைத்தளத்தில் பொருள்களை புரொமோட் செய்யும் போது அதை விளம்பரப்படுத்த பெற்றுக் கொள்ளும் சலுகைகள் அல்லது பரிசுகள் குறித்து தெளிவாக காணொளியில் குறிப்பிட வேண்டும். இந்த தகவல் உடனே மறைந்து விடும்படி இல்லாமல் நீண்ட நேரம் காட்டப்பட வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் பத்து முதல் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.