
இன்றைய காலகட்டத்தில் சமூகவலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அதன் பிறகு ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் அனைவருமே செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் கால், எஸ்எம்எஸ் மற்றும் நெட் கார்டு போன்றவைகளுக்கு சேர்த்து ரீசார்ஜ் செய்கிறார்கள்.
அதன் பிறகு கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவைகளுக்கு சேர்த்து தான் ரீசார்ஜ் செய்யும் வசதி உள்ளது. பொதுவாக ரீசார்ஜ் செய்யும்போது அன்லிமிடெட் கால் வசதியுடன் 100 sms செய்து கொள்ளும் வசதியும் கிடைக்கிறது. இதன் காரணமாக ரீசார்ஜ் கட்டணம் கூடுகிறது. எனவே இனி போன் பேசுவதற்கும் எஸ்எம்எஸ் செய்வதற்கும் தனித்தனியான ரீசார்ஜ் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இனி கால் மற்றும் எஸ்எம்எஸ் தேவைகளுக்கு தனி தனியாக ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை அடுத்த 30 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.