பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியான வணங்கான், மத கஜ ராஜா, காதலிக்க நேரமில்லை ஆகிய மூன்று படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதில் 10ஆம் தேதி வெளியான வணங்கான் திரைப்படம் இதுவரை 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அதேபோன்று 12ஆம் தேதி வெளியான மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்களுக்குப் பின்பு வெளியாகி இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் 14 ஆம் தேதி வெளியான நவீன காதல் கதையாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் இதுவரை 7 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.