இந்த மாதம் பொது விடுமுறை நாட்கள் அதிகம் இருப்பதால் வங்கிகளுக்கும் விடுமுறை நாட்கள் அதிகமாக அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் பொங்கல் விடுமுறை என தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தேசிய வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு இன்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும் அதனை தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் வங்கிகள் விடுமுறையால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.