
2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே வைத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் பகவத் காரர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியன் வங்கிகள் சங்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் இந்தியாவில் அலுவலகங்களைக் கொண்ட வெளிநாட்டு வங்கிகள், அதோடு அனைத்து கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்கள் போன்றவை அடங்கும். அமைச்சகத்தின் இந்த பதிலுக்காக வங்கி துறையில் பணிபுரியும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.