பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் சில சலுகைகளை வழங்கபட்டு இருக்கிறது. அதாவது பார்வை மற்றும் தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடோடு இருக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேரம், தனி கேள்வி, மற்றும் கால்குலேட்டர் உள்ளிட்ட குறிப்பிட்ட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளது. ஆனால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எந்த ஒரு சலுகையும் வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில் கர்நாடகாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும். அதே சலுகை 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.5 மணி நேரம் தேர்வுக்கு கூடுதலாக 50 நிமிடமும், இரண்டு மணி நேரத்திற்கு கூடுதலாக 40 நிமிடங்களும், ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக 30 நிமிடமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.