பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் அரசு சார்பாக பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காவல்துறையில் பெண்களுடைய பங்கு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் காவல்துறையில் பெண்களின் பலத்தை 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கடந்த சில வருடங்களாக மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியது.

அதில் நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தது மூன்று பெண் உதவி ஆய்வாளர்கள், 10 பெண் காவலர்கள் பணியில் இருந்தால் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு அவர்களுடைய உதவி கிடைக்கும் என்பதால் காவல்துறை காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் கடந்த வருடம் நாடு முழுவதும் காவல்துறையில் பெண்கள் 11.75% மட்டுமே பணியாற்றுகிறார்கள். அதனால் காவல் துறையில் பெண்கள் இணைவதை ஊக்குவிக்கும் விதமாக பெண் காவலர்களுக்கு சில சலுகைகளை வழங்க மாநில மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.