இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால் உரிய நேரத்திற்கு அந்த கடன் தொகை மற்றும் தவணைத்தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகு பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது சிபில் ஸ்கோரை பாதிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

அதன் பிறகு உங்களால் திருப்பி செலுத்தக்கூடிய கடனை மட்டுமே பெற வேண்டும். அதோடு வங்கிகளில் அடிக்கடி கடன் வாங்குவதை தவிர்ப்பதோடு அவசிய தேவைக்காக மட்டுமே கடன் வாங்கினால் சிபில் ஸ்கோரில் எந்த பாதிப்பும் இருக்காது. ஒருவேளை உங்கள் சிபில் ஸ்கோரில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் ஆலோசகரை அணுகலாம். அவர் உங்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதோடு சிபில்  ஸ்கோரை மீட்பது குறித்தும் ‌ அறிவுரை வழங்குவார். மேலும் கடன் பெறுவதற்கு முன்பாக சிபில் ஸ்கோரை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் வங்கிகளில் எளிதாக கடன் பெறலாம்.