தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் ‘டிட்வா’ புயல் இன்று (நவ. 27) உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புயலானது, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடலிலிருந்து ஆந்திர கடற்கரைப் பகுதியை நோக்கிச் செல்லக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால், இன்று இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.