பெங்களூருவில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. சமூகவலைத்தளத்தில் அந்த பெண், ஆட்டோவை புக் செய்துவிட்டு, சாவி எடுப்பதற்காக அந்த 3 நிமிடங்கள் தாமதமாக வர , Rapido ஆட்டோ டிரைவர் ஒருவர் என்னை நோக்கி “தாமதம்மா, நான் பார்த்துக்கொள்கிறேன் எப்படிச் செல்கிறாய் (Dekhta hoon kaise jaate ho)” என அபாயகரமான முறையில் மிரட்டியது ஏற்கத்தக்கதல்ல.
எங்கள் வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டு, அவர் அச்சுறுத்தியதால், நான் பயத்தின் காரணமாக கூடுதலாக ₹20 பணம் கொடுத்துவிட்டேன். அத்தனை அத்துமீறல்களுக்குப் பிறகும் அவர் சாதாரணமாக அங்கிருந்து சென்றது, இந்த நகரில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அப்பெண் சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ வைரலானது. இது பயணிகளுக்கான சேவை தரம் மற்றும் பாதுகாப்பு பற்றிப் பெரிய விவாதத்தை உருவாக்கியது. Rapido நிறுவனம் உடனடியாக அந்த டிரைவரைப் பணியிலிருந்து நீக்கியதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க AI கண்காணிப்பு மற்றும் 24×7 SOS உதவி போன்ற வசதிகளை உறுதி செய்துள்ளது. போலீசார் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
.@rapidobikeapp
who runs your mafia business? Because this driver just harassed me for waiting for 3 mins and he has the audacity to say “dekhta hoon kaise jaate ho”.I booked an auto. I ask him to wait for 2 mins because I was finding the keys. I come down. This certain… pic.twitter.com/unRA0QZXZh
— Shreya (@miless_15) October 29, 2025
