
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அட்லீ இயக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நயன்தாராவை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஷாருக்கான் பார்ப்பதற்காக நயன்தாராவின் வீட்டின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் ஷாருக்கான் நயன்தாராவை பார்த்துவிட்டு காரில் கிளம்பும்போது நயன்தாராவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினார். அதோடு அங்கிருந்த ரசிகர்களை பார்த்தும் ஷாருக்கான் கையசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் ஷாருக்கான் நயன்தாரா ஜோடி சூப்பராக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். மேலும் ஒரு சூப்பர் ஸ்டாரை நயன்தாராவை பார்ப்பதற்கு அவருடைய வீட்டிற்கு சென்றதால் இனி பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் குவியலாம் என்றும், நயன்தாரா வேற லெவலுக்கு சென்று விட்டதாகவும் ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
OMG!! #ShahRukhKhan kissed #Nayanthara
pic.twitter.com/Ul9UWLPgEd
— ꜱʜᴀʜʀᴜᴋʜ ᴋɪɴɢᴅᴏᴍ
(@shahrukingdom) February 11, 2023