கன்னியாகுமரி மாவட்டம் புன்ன மூட்டுக்கடை பகுதி சேர்ந்தவர் ஜான் பிரகாசம். இவரது மனைவி பெல்சிட்டாள்(53). இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பெல்சிட்டாள் நேற்று முன்தினம் இரவு கச்சேரிநடை பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதோடு, சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தடிகள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கால் துண்டாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெல்சிட்டாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பெல்சிட்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் ஓட்டுனரான அஜின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.