நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் தற்போது நடைப்பெற்று வருகின்றதுய இந்நிலையில் மக்களவையில். இன்று (டிசம்பர் 7) பாஜக  எம்பி தரம்பிர் சிங் பேசுகையில், லிவ்-இன் உறவை ஒரு ஆபத்தான நோய். அதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப் போன்ற நோய் சமூகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். காதல் திருமணங்கள் தான் பெரும்பாலும் விவாகரத்தில் முடிகிறது.

திருமணம் போன்ற விஷயங்களில் மணமக்களின் பெற்றோரின் சம்மதம் அவசியம். குடும்பம் மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் நடைபெறும் திருமணங்களை மட்டுமே மதிக்கின்றனர். திருமணம் போன்ற புனிதமான பந்தத்தின் புனிதம் பேணப்பட வேண்டும் என்றார்.