தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் ஒரு விபத்து நடந்தது. அதாவது திவ்யஸ்ரீ என்ற பெண்மணி லாரி மோதிய விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கினார். உடனே சுதாகரித்துக் கொண்ட ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். ஆனால் அந்த பெண்ணின் முடி லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக அந்தப் பகுதியில் கூட்டம் கூடியது. அந்த சமயத்தில் அவ்வழியாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் வந்துள்ளார். அப்போது கூட்டமாக இருந்ததால் அவர் தன் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்தார்.

அவர் அந்த பெண் லாரியின் சக்கரத்தில் சிக்கி இருப்பதை கண்டவுடன் உடனடியாக அவரை மீட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். பின்னர் அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் லாரியின் சக்கரத்தை தூக்கி அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டி அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி பெண்ணின் உயிரை மீட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.