கேரள மாநிலத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி இருப்பது புள்ளி விவரத்திலிருந்து தெரிகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கேரளாவில் 3056 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு 3559 ஆகவும், 2022 ஆம் ஆண்டு 4586 ஆகவும் அதிகரித்துள்ளது. லாக் டவுன் காலத்தில் மட்டும் 56 சிறுமிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். அவர்களில் 23 பேர் குழந்தை பெற்றனர். லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது அதிகமான பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.