இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி 76 ரன்கள் வரை அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய அணியினர் மும்பைக்கு திரும்பியவுடன் வான்கடே மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு விராட் கோலி அவசரமாக லண்டன் கிளம்பி சென்றார். அதாவது விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் அவருடைய மகன், மகள் ஆகியோர்கள் லண்டனில் இருப்பதால் அவர் அங்கு உடனடியாக கிளம்பியதாக கூறப்பட்டது.

அதோடு விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் அடிக்கடி லண்டன் செல்வதால் அவர்கள் அங்கு குடியேற போவதாகவும் சமீப காலமாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாராஷ்டிராவில் தான் கட்டி வரும் கனவு வீட்டின் வீடியோவை விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அலிபாக் நகரில் பிரமாண்ட வீடு கட்டி வரும் நிலையில் அந்த வீட்டை கட்டும் ஆவாஸ் நிறுவனத்திற்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் விராட் கோலி குடும்பத்துடன் லண்டனில் குடிபெயரப் போவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)