உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ஒரு பிக்கப் டிரக் நூற்றுக்கணக்கான மீன்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது திடீரென கவிழ்ந்து விட்டது. இதனால் சாலை முழுவதும் மீன்கள் சிதறி கிடந்தன. மரியானி கிராமத்தில், சௌபேபூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இந்த விபத்து நடந்தது.

விபத்து நடந்ததும் அங்கு வந்த உள்ளூர் மக்கள் பாத்திரங்கள் கொண்டு வந்தும் சிலர் கைகளாலும் மீன்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு சென்றனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில் சாலையில் சிதறிய மீன்களையும், அவற்றை எடுக்கும் மக்களையும் தெளிவாக பார்க்கலாம்.