மத்தியப் பிரதேசத்தின் பெஞ்ச் பகுதியைச் சேர்ந்த ராஜு பட்டேல் என்ற 52 வயது தொழிலாளி, இரவு நேரத்தில் போதையில் ஒரு புலியைப் பெரிய பூனையாக நினைத்து தட்டிக் கொடுத்து, மது ஊற்றி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது உண்மையான சிசிடிவி காட்சி போலத் தோன்றியதால் பலரும் நம்பினர். ஆனால் இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய போலி வீடியோ என்பது உண்மை சரிபார்ப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
பெஞ்ச் புலிகள் பிரபலமான இடம் என்றாலும், இதுபோன்ற எந்தச் சம்பவமும் உள்ளூர் வனத்துறை அல்லது செய்தி ஊடகங்களால் பதிவு செய்யப்படவில்லை. வீடியோவை உருவாக்கியவர், ராஜு இப்போது போலீஸ் பாதுகாப்பில் இருப்பதாகவும், தனது சமூக வலைப்பக்கத்தை முடக்கியதாகவும் கூறியுள்ளார். உண்மையில் ராஜு என்ற நபர் கூட இல்லை; எல்லாம் AI-ஆல் உருவாக்கப்பட்ட கதை.
On October 4, 2025, in Pench, India, a surreal moment was captured on CCTV. The photo shows Raju Patel, a 52-year-old laborer, patting a tiger he mistook for a "big cat" after a late-night card game. Tipsy from homemade liquor, Raju stumbled onto a street where a sub-adult Bengal… pic.twitter.com/FXbZsGeawy
— Constituent 🇺🇸🌺🐦🕊️ 🕉️ (@808constituent) October 23, 2025
பலரும் இதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு, ராஜு குடித்த மதுவின் ரெசிபியைக் கேட்டும், AI எந்தக் கருவியால் செய்தார் என்றும் கமெண்ட் செய்தனர். இதுபோன்ற போலி வீடியோக்கள் அதிகரிப்பதால், எல்லாவற்றையும் உடனே நம்பாமல் சரிபார்த்துப் பார்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
