
இன்றைய காலகட்டத்தில் பலரும் நீண்ட தூர பயணத்திற்கு பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் இருப்பதற்காகவும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். சிரமமில்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக டிக்கெட் முன்னதாகவே முன்பதிவு செய்து இருக்கிறார்கள். அதிகப்படியான மக்கள் தங்களுடைய ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்கின்றனர். சலுகை விலையில் டிக்கெட்டுகளை ரயில்வே நிறுவனம் வழங்கி வருகிறது. ரயிலில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முதலில் ஐஆர்சிட சி செயலியை பதிவிறக்கம் செய்து உள் நுழைய வேண்டும்
பெயர், வயது, பெர்த் மற்றும் கோச் விருப்பம் போன்ற பயண விவரங்களை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும். இதனால் டிக்கெட் புக் செய்யும் போது செயல்முறை வேகமாக இருக்கும். அதேநேரம் நேரமும் மிச்சமாகும். இதில் டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு அனைத்து பயணிகளின் பட்டியலையும் தயார் செய்ய வேண்டும். அவர்களுடைய பெயர்கள் வயதுகள் மற்றும் கோச் விருப்ப விவரங்களை எழுத வேண்டும். உங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கில் “மை ப்ரொபைல்” பிரிவில் இந்த பட்டியலை உருவாக்க வேண்டும். தட்கல் முன்பதிவு கட்டண முறைக்கு ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி விரைவாக புக் செய்யலாம்.