பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்துத்துவாதம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில், நான் உண்மையான இந்துவாக இருக்கிறேன். எந்த இடத்திலும் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் அவமதித்ததில்லை. அப்படி அவமதித்தால் அது இந்து மதத்திற்கு நான் செய்யக்கூடிய தவறு. அதுதான் எங்களை பொறுத்தவரை இந்து மதம். உச்சநீதிமன்றம் 1995ல் இந்துத்துவாவிற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது.

ஆனால் இங்கு இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் தமிழகத்தில் தங்களுடைய சொந்த லாபத்திற்காக இத்தனை காலமாக அந்த வார்த்தைகளை எல்லாம் பின்னி பிசைந்து தவறாக சித்தரித்திருக்கிறார்கள். தற்போது மக்கள் மன்றத்தில் இந்துத்துவா என்றால் என்ன ? என்பது குறித்து விவாதம் நடப்பது எங்களுக்கு சந்தோஷம்.

இதன் மூலமாக இந்துத்துவாவினுடைய விளக்கம் வெளியே வரட்டும். இந்துத்துவா என்பவன் யாருக்கும் எதிரி கிடையாது. நான் இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் வெறுக்கிறேன் என்று யாராவது கூறினால் அவர்கள் இந்துதுவா கிடையாது. ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் நடக்கிறது அதற்கு சந்தோஷப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.