மழைக்காலத்தின் இரு முகங்களையும் வெளிப்படுத்தும் ஒரு மனதை உருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மழைத்துளிகள் சிலருக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தலைக்கு மேல் கூரை இல்லாதவர்களுக்கு அது கடினமான வாழ்க்கைப் போராட்டமாக மாறுகிறது.
தற்போது வைரலாகும் இந்த வீடியோவில், ஒரு உதவியற்ற குடும்பம் நடைபாதையில் மழையில் நனைந்து, பசியைத் தணிக்க உணவு சமைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள், உணவு வீணாகாமல் இருக்க, தங்கள் தந்தைக்கு உதவியாக ஒரு பலகையைப் பிடித்து மழைத்துளிகளைத் தடுக்கிறார்கள். அதே சமயம், தந்தை மழையிலும் நெருப்பை மூட்டி, குடும்பத்திற்கான உணவை சமைக்க போராடுகிறார்.
இந்த காட்சியை @girijaprasaddubey என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளனர். இந்த செய்தி எழுதும் வரை, 6 கோடிக்கும் அதிகமானோர் இதைப் பார்த்து, உணர்ச்சி மிகுந்த கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “மழை சிலருக்கு நிவாரணம், மற்றவர்களுக்கு வலியின் வெள்ளம்” என்றும், “இந்த காட்சி என்னை உலுக்கியது” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
“>
மழைக்காலத்தின் இனிமையை அனுபவிக்கும் ஒருபுறம், அதே மழையில் பசியுடன் போராடும் இன்னொருபுறம் இருக்கும் வித்தியாசத்தை இந்த வீடியோ தெளிவாகக் காட்டி, மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தை நெட்டிசன்களுக்கு நினைவூட்டுகிறது.
