மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததால், சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லஜ்பத்புரா பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் பரவியுள்ள வீடியோவில், சுஷில் சௌபே என்ற இளைஞர் தரையில் படுத்திருக்கும்போது, சிலர் தடியால் அவரைதாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மூன்று நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த தாக்குதலுக்குப் பிறகு, கடுமையாக காயமடைந்த சுஷில் சௌபே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
#WATCH | Man Succumbs After Being Hit With Sticks In Madhya Pradesh’s Sagar Over Old Dispute; Video Captures Incident #MPNews #MadhyaPradesh pic.twitter.com/7pUHJiucKR
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 28, 2025
இறந்தவர் மீது பல குற்றச் சாட்டுகள் இருந்ததாகவும், அவரின் செயல்கள் காரணமாக அப்பகுதி மக்கள் நீண்டநாளாகப் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இளைஞர்கள் குழு ஒரே சமயம் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
