
உத்திரபிரதேச மாநிலத்தில் ஹமித்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமகன் வீட்டார் சாப்பிடும் போது ரொட்டிகள் சுட்டு தர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மணமகன் மெஹ்தாப் திருமணத்தை நிறுத்தி விட்டார். பின்னர் மணமகனும் அவருடைய உறவினர்களும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் அவர்களை தடுக்க மணமகள் குடும்பத்தினர் முயற்சி செய்தபோதிலும் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர் திருமணம் நடைபெற இருந்த அதே நாளில் மணமகன் தன்னுடைய உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 24ஆம் தேதி புகார் கொடுத்தனர். அவர்கள் திருமணத்திற்காக 7.5 லட்சம் செலவு செய்ததாகவும் மணமகன் குடும்பத்தினருக்கு 1.5 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் புகாரை பெற்ற காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்துள்ளனர்