நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான நன்மைகளை பெறலாம். இதில் தற்போது முக்கியமான 7 திட்டங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி கடந்த வருடம் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்களின் நிதி நிலைமை மேம்படும். இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 லட்சம் வரை கடன் பெற முடியும். அதன்பிறகு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ரூ.1,20,000 நிதி உதவியும் நகர்ப்புறங்களில் ரூ.1,30,000 நிதி உதவியும் வழங்கப்படும்.

இதே போன்று ரேஷன் கார்டு மூலம் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்களின் மூலம் சொந்த வீடு கனவை நனவாக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் பயிர்களுக்கு இழப்பீடு ஏற்பட்டால் நிவாரணத் தொகை பெற்று பயன்பெறலாம். ஒரு சில மாநிலங்களில் பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. அதாவது விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ‌.15000 பெற்று அதன் மூலம் இலவச தையல் மிஷினை பெறலாம்.

ஏற்கனவே விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.6000 நிதி உதவியை விவசாயிகள் பெறுகிறார்கள். இதைத்தொடர்ந்து தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஷ்ராமிக் சுரக்ஷா அட்டை திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுபோக மாநில அரசுகளும் ரேஷன் கார்டுகள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதால் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை பெற்று பயன்பெறலாம்.