இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வெளிவருவதால் அதைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து தற்போது பார்க்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகும்போது அவருடைய மனைவியின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்ப்பது மற்றும் புதிதாக குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்ப்பது கட்டாயம்.

இல்லையெனில் ரேஷன் அட்டையில் உங்களுக்கு பொருட்கள் கிடைக்காது. இதேபோன்று குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதும் கட்டாயம். இந்நிலையில் ரேஷன் அட்டையில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்றால் புதிதாக திருமணமான நபர் முதலில் மனைவியின் ஆதார் கார்டை புதுப்பித்து தந்தையின் பெயருக்கு பதிலாக கணவனின் பெயரை அதில் சேர்க்க வேண்டும். இதேபோன்று குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டுமானால் அதற்கு குழந்தைக்கு முதலில் ஆதார் அட்டை எடுக்க வேண்டும். குழந்தைக்கு ஆதார் அட்டை பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம். நீங்கள் ஆதார் தொடர்பான அனைத்து விதமான அப்டேட்டுகளையும் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.

அதன் பிறகு ரேஷன் கார்டில் புதிய பெயர்களை சேர்ப்பதற்கு திருத்தப்பட்ட ஆதார் அட்டை நகலுடன் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க உணவு வழங்கல் துறை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கூட ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்க்க கோரலாம். அதற்கு முதலில் உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ உணவு வழங்கல் துறையின் இணையதள பக்கத்திற்குள் சென்று ரேஷன் கார்டில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பான வசதி உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ போர்டலில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சில மாநிலங்களில் இந்த வசதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.