நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பாக நடைபெறும் குளறுபடிகளை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் ரேஷன் கடைகள் மூலமாக பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனிடையே மக்கள் பலரும் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்ததால் பொதுமக்களின் வசதிக்காக தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு உடனடியாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.