
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைகின்றன . இந்நிலையில் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பதற்கு https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் உள் நுழைவு ஐடியை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒருவேளை ஏற்கனவே ஒரு ஐடி இருந்தால் அதனை வைத்து உள்நுழையலாம்.
புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பதற்கான விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் குடும்பத்தில் புதிய நபர்களை பற்றிய தகவலை அதில் கொடுக்க வேண்டும். பிறகு அனைத்து ஆவணங்களும் படிவத்தில் இணைக்கப்பட வேண்டும். படிவத்தை சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் போர்டலில் படிவத்தை பார்த்து விண்ணப்பத்திற்கு பிறகு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படும். இறுதியாக ஒப்புதல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் பெயர் இணைக்கப்படும்.