தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது.  இந்த நிலையில் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் இடத்தில் கணவர் பெயர் இருந்தால் அந்த குடும்பத்திற்கு உரிமை தொகை வழங்கப்படுமா என்று கேள்வி எழும்பியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆயிரம் உரிமைதொகை திட்டத்தில் பயன் பெற குடும்ப தலைவர் இடத்தில் பெண்கள் பெயர் தான் இருக்க வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். குடும்ப அட்டையில் ஆண்களின் பெயர் குடும்ப தலைவராக இடம் பெற்றிருந்தால் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார் எனவும் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.