இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது வங்கிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகளில் 17 அடையாளங்கள் இருக்கிறது. இதில் முதலாவது 500 ரூபாய் பயணத்தில் 500 என்பது தேவ நாகரி என்ற எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர் ,சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் போன்றவை அந்த நோட்டை தடவிப் பார்த்தாலே உணர முடியும்.

இந்த மாதிரியான உணரும்படியான ஆளுநரின்  கையொப்பம், சின்னத்தை உணரும்படியாக கள்ளநோட்டில் அச்சடிக்க முடியாது. இதன் மூலமாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். நல்ல நோட்டுகளில் காந்தியின் உருவம் வலது பக்கத்தில் அமைந்திருக்கும். கள்ள நோட்டுகளில்  சரியான காந்தி உருவம் இருக்காது. கார்ட்டூன் போல உருவத்திலோ அல்லது வலது பக்கத்தில் சற்று தள்ளியோ இருக்கும். உண்மையான 500 ரூபாய் நோட்டை மடிக்கும் போது பச்சை கலரில் இருந்து இண்டிகோ கலரில் மாறும்.

500 என்று எழுதி இருக்கும் எழுத்து பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும். ஆனால் கள்ள நோட்டுகளில் இது போன்று இருக்காது. 500 ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் அசோக சக்கரம், அரைவட்டமான இடத்தில் 500 என்று எழுதி இருக்கும். மேலும் ரூபாய் நோட்டுகளில் மையத்தில் எழுதப்பட்டிருக்கும் 500 என்ற எழுத்தை வெளிச்சத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே பார்க்க முடியும். இது போன்ற வித்தியாசமான இதை வைத்து எளிமையான எளிமையாக கள்ள நோட்டுகளை அடையாளம் கண்டுபிடித்து விடலாம்.