தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. இந்த நிலையில் குடும்ப தலைவிகள் ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்கு விண்ணப்பத்தினை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி ஆயிரம் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கும் பொழுது குடும்பத்தலைவிகள் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், திருமண நிலை, தொலைபேசி எண், சொந்த வீடு அல்லது வாடகை வீடு விபரம், குடும்ப உறுப்பினரின் பெயர், வயது, தொழில் விவரம், வருமானவரி செலுத்துவராக இருந்தால் அந்த விபரம், சொத்து விவரம், அரசு திட்டங்களின் மூலம் ஏதேனும் நிதி உதவி பெறப்பட்டதா என்ற விவரம், சொத்து நில விவரங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தால் அது குறித்த விவரங்கள் அனைத்து விவரத்தையும் விண்ணப்பத்தில் சரியாக பதிவிட்டு குடும்ப தலைவிகள் கையெழுத்துட்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.