இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்கள் மானிய விலையில் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் ரேஷன் கார்டுகள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் ரேஷன் கார்டுகளுக்கு ஏற்றவாறு அரசு சலுகைகளை வழங்குகிறது.
அந்தியோதயா அன்ன யோஜனா(AAY) ரேஷன் கார்டு:
இந்தியாவில் 15 ஆயிரத்திற்கு கீழ் வருமானம் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு கொடுக்கப்படுகிறது. இதில் செருப்பு தொழிலாளர், கட்டுமான தொழிலாளர், தெரு ஓர வியாபாரிகள் அடங்குவர்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு BPL ரேஷன் கார்டு:
ஆண்டு வருமானம் 24 ஆயிரத்து 200 ரூபாய் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த ரேஷன் கார்டு கொடுக்கப்படுகிறது.
வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு APL ரேஷன் கார்டு:
ஏபிஎல் ரேஷன் கார்டு பெறுவதற்கு அந்த குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற்று இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. APL ரேஷன் கார்டு நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக இருந்து வருகிறது.