ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களில் ஊழல் நடைபெறுவதாகவும் இதில் ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்பதாகவும் தொடர்ந்து அரசுக்கு புகார் வந்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவதாகவும் பொருட்கள் சரி வர வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனை கருதி உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஷாம்லி மாவட்ட ரேஷன் கடைகள் அனைத்திலும் EWS என்ற மின் எடை அளவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ரேஷன் அட்டைதாரர்களின் அளவுகள் இந்த மென்பொருளில் பதிவு செய்யப்படும். இ பி ஓ எஸ் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட ஃபோர்க்குடன் உள்ள மென்பொருளில் பயணர்களின் கைவிரல் வைக்கப்பட்டால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சரியான எடை மின் எடை அளவீடு மூலமாக கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இந்த முறையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் ஊழல் செய்ய முடியாது. இதுவரை 434 கடைகளில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது கொண்டுவரப்படும் என அரசு தெரிவித்துள்ளது.