இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் வங்கிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வாறு கடைப்பிடிக்காத வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் ஷிர்பூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இந்த வங்கியில் மோசமான நிதி நிலை இருப்பதால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கியில் கடன் வழங்கவோ அல்லது முதலீடு செய்யவும் முடியாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் சொத்துக்களை மாற்றவோ அல்லது அகற்றவோ முடியாது. வங்கியில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்குகள் அல்லது டெபாசிட்டரின் எந்த கணக்கிலும் உள்ள மொத்த இருப்பிலிருந்து எந்த தொகையும் எடுக்க முடியாது. அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கார்ப்பரேஷன் அமைப்பிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் இன்சூரன்ஸ் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஏப்ரல் 8 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.