இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மத்திய அரசு அமல்படுத்திய நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள ரேஷன் கடைகள் மூலம் மாதம் தோறும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் கார்டுதாரர்கள் மட்டும் இன்றி உறுப்பினர்களும் ரேஷன் கார்டை கொடுத்து தேவையான பொருட்களை பெறலாம். 2023 ஆம் ஆண்டில் முதல் 11 மாதங்கள் மற்றும் இந்த திட்டத்தின் மூலம் 28 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.