தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள பயனாளிகள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்வது மற்றும் புதிய ரேஷன் அட்டைகள் என பல பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டையில் இறந்தவர்களின் பெயரை நீக்குவதில் கவனமுடன் செயல்பட வேண்டும் என ரேஷன் அட்டைதாரர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதாவது ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்யும்போது இறந்தவரின் ஆதார் கேட்கப்படுகிறது. சிலர் தவறுதலாக இறந்தவரின் ஆதார் கார்டுக்கு பதிலாக தங்களுடைய ஆதாரை வழங்குகின்றனர். மின் ஆளுமை முகமை மூலமாக ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்டில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுவதால் கவனமாக செயல்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.