நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக ஒரே நாடு ஒரே ரேசன் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியானா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்தில் இரண்டு முறை ரேஷன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் ஏழை குடும்பங்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ள நிலையில் மே மாத ரேஷனும் நிலுவையில் உள்ளது.

இதனை கருதி ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை மே மாதத்தில் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் பலன் பெறாத அனைத்து பயனாளிகளுக்கும் இரட்டை ரேஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் BPL மற்றும் AAYகார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையை பெறலாம் எனவும் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் மே 8 ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.