இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மட்டும் இன்றி பலவிதமான திட்டங்களும் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை போன்ற பல திட்டங்கள் அமலில் இருக்கிறது. அந்த வகையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் பிபிஎல் ரேஷன் அட்டைகள் மூலம் வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு சென்று நேரடியாக கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதில் பிபிஎல் ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பதால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ‌.1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக வங்கிகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு சிறப்பு சலுகையாக வட்டி விகிதத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.