தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள்புயலால் பெரும் சேதத்தை கண்டுள்ளது. சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் இன்னும் நிலைமை சீராகவில்லை . சிரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடைமைகளை இழந்து பலரும் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது பொது மக்களின் இழப்பை ஓரளவு ஈடு செய்ய முடியும் என்று கருதுகிறது. இந்த பணம் ரேஷன் கடை மூலமாக ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரொக்க பணமாக 6000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், விரைவில் தமிழக அரசின் மூலமாக நிவாரணத்தொகை வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளும், பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. அதன்படி நிவாரணத் தொகையினை பொதுமக்களுக்கு முறையாக சேர்க்க அலுவலர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.