இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று மக்களை ஆட்டிப்படைத்த போது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட கூடுதலாக இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி அவர்கள் இந்த திட்டத்தை மேலும் செயல்படுத்த அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ரேஷன் அட்டைகளில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் கோதுமை மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்கள் இனி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக அருகில் உள்ள உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ரேஷன் அட்டைதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை நகல்களை இணைத்து சமர்ப்பிக்கும் போது உங்களுடைய பெயர் ரேஷன் அட்டையில் சேர்க்கப்படும்.