
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்கள் பிறந்த குழந்தைக்கு கூட இப்போதிலிருந்தே சேமிக்க விரும்புகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைக்கும் மக்களுக்காக தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மக்களுக்கு அதிக அளவிலான வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தபால் துறையில் கிராம் சுமங்கல் கிராமின் ஜீவன் பீமா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பணம் திரும்ப பெறும் திட்டமாகும். இந்த திட்டத்தில் வெறும் 95 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம் முதிர்ச்சி அடைந்தவுடன் நீங்கள் சுமார் 14 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் பெயரிலிருந்து இது கிராமப்புறங்களில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும்.